Thursday, July 06, 2006

வெற்றி என்றும் தூரமில்லை...


கடிகாரம் நின்றாலும் காலம் நிற்பதில்லை
கண்கள் மூடினாலும் காட்சிகள் மாறுவது இல்லை

இரவாய் தெரிந்தாலும் கதிரவன் மறைவதில்லை
பகலிலே பால் நிலாவும் ஒளியிழப்பதில்லை

இல்லாமல் இருக்கும் இவை எல்லாம் மாயம்
இங்கொன்றை நினைவில் கொள் நீயும்

தோல்வியினால் வெற்றி தோன்றாது என்பதில்லை
தடைகள் தோன்றினாலும் வெற்றி என்றும் தூரமில்லை...